அறிமுகப் பயிற்சி - Foundation Course (FC)
மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகள்:
கைகளில் உள்ள நரம்புகளைத் தூண்டி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
கால்களில் உள்ள மூட்டுகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது.
சுவாசத்தை சீராக்கி, உடலுக்குத் தேவையான பிராண வாயுவை அதிகரிக்கிறது.
கண்களைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி, கண்பார்வைக் கோளாறுகளைத் தடுக்கிறது.
தலைப்பகுதியைச் சுத்தப்படுத்தி, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்துகிறது.
முதுகுத்தண்டை பலப்படுத்தி, தண்டுவடப் பிரச்சினைகளைத் தடுக்கிறது.
உடலின் மேல்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
உடலின் முக்கிய புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உறுப்புகளைத் தூண்டுகிறது.
உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி, ஆற்றலைச் சமநிலைப்படுத்துகிறது. இது உடலின் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் மற்றும் காற்று ஓட்டத்தை சீராக்குகிறது.
உடலின் உயிர் ஆற்றலைப் பெருக்கவும், முதுமையைத் தள்ளிப் போடவும் உதவும் எளிய பயிற்சி.
கவனத்தை ஒருமுகப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும் அடிப்படை தியான முறை.
வகுப்பு நேரங்கள்
| I | காலை 5:30 - 7:30 |
| II | காலை 10:30 - மதியம் 12:30 |
| III | மாலை 5:30 - 7:30 |
| நாள் 1 | புதன் | அறிமுக உரை | சுய அறிமுகம் | கை பயிற்சி, கால் பயிற்சி | |
| நாள் 2 | வியாழன் | நரம்பு தசைநார் பயிற்சி, உடல் தளர்த்தல் | நாடிசுத்தி, தண்டுவட சுத்தி விளக்கம் மற்றும் செய்முறை | ||
| நாள் 3 | வெள்ளி | கண்பயிற்சி, கபாலபதி, உடல் தளர்த்தல் | ஆக்கினை விளக்கம் | தவம் | |
| நாள் 4 | சனி | மகராசனம் நிலை 1 மற்றும் 2, உடல் தளர்த்தல் | அருட்காப்பு / சங்கல்பம் விளக்கம் | ||
| நாள் 5 | ஞாயிறு | உடற்பயிற்சி, உடல் தளர்த்தல் | காயகல்பம் விளக்கம் | காயகல்பம் செய்முறை | |
| நாள் 6 | திங்கள் | உடற்பயிற்சி, உடல் தேய்த்து விடுதல், 14 அக்குபிரஷர் | உடற்பயிற்சி முழுவதும் | தவம் | |
| நாள் 7 | செவ்வாய் | உடற்பயிற்சி மற்றும் உடல் தளர்த்துதல் விளக்கம் | சாந்தி தவ விளக்கம் | ||
| நாள் 8 | புதன் | உடற்பயிற்சி முழுவதும் | வாழ்த்தும் பயனும் | ||
| நாள் 9 | வியாழன் | எண்ணத்தின் சிறப்பு | |||
| நாள் 10 | வெள்ளி | துரிய தவ விளக்கம் / தீட்சை | |||
| நாள் 11 | சனி | அகத்தாய்வின் சிறப்பு | |||
| நாள் 12 | ஞாயிறு | ஐயம் தெளிதல் | |||
| நாள் 13 | திங்கள் | குருவின் மேன்மை | |||
| நாள் 14 | செவ்வாய் | உடற்பயிற்சி | தவம் | அகத்தாய்வு சேர்க்கை | சான்றிதழ் வழங்குதல் |