YOGA FOR BUSINESS
தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தும் ஒரு நிறுவனம் பெருவளர்ச்சி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
- James McKinsey, Founder, McKinsey & Company
நிறுவனம் - தொழிலாளர்கள்
கட்டளைக்கு கீழ்படிந்து தன்னையே அர்ப்பணித்து நிறுவனத்தின் வெற்றியில் பெரும்பங்காற்றுபவர்கள் பணியாளர்கள். ஒரு நிறுவனச் சக்கரம் தொடர்ந்து சுழல அச்சாணியாக இருப்பவர்கள் பணியாளர்கள். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பணியாளர்களைப் பொறுத்து அமைகிறது.
உடல்நலக்குறைபாடு, மனக்குழப்பம், குடும்பச்சிக்கல்கள், தலைமையின் மீதான அதிருப்தி, பணியாளர்களிடையே ஒற்றுமையின்மை போன்றவை நிறுவனத்தின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும். ஒரு பணியாளர் தன் அளவில் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் செலுத்த முடியும்.
ஆக, பணியாளரின் தேக ஆரோக்கியத்திலும், மனத் தெளிவிலும் கவனம் செலுத்த வேண்டியது ஒரு நிறுவனத்தின் கடமையாகும். ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும் பணியாளர் மேம்பாடு அவசியமாகிறது.
ஸ்கை யோகா தரும் ஏற்றங்கள்
Sky Yoga
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அகத்தால் உணர்ந்து அன்பால் அருளியவையே ஸ்கை யோகா பயிற்சிகள். ஸ்கை யோகா உங்கள் நிறுவன வளர்ச்சியில் உங்களுக்குத் துணை நிற்கிறது.
உங்கள் நிறுவனப் பணியாளர்களின் உடல், மன துன்பங்களைக் களைந்து ஆர்வம், உற்சாகம், செயற்திறன் போன்ற உயர் பண்புகளை அவர்களுக்கு தோற்றுவித்து, அவர்களின் அகத்தையும், புறத்தையும் ஆனந்தமடையச் செய்து, தனிப்பட்ட வாழ்விலும் நிறுவன வளர்ச்சியிலும் அன்போடும் அக்கறையோடும் செயல்படுவதற்கான பயிற்சிகளையும் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளையும் உள்ளடக்கியது ஸ்கை யோகா கல்வி.
15 வேலம்பாளையம் அறிவுத்திருக்கோயில்
அறிவுத்திருக்கோயில்கள், தவமையங்கள் என திருப்பூர் பகுதி முழுக்க விரிந்திருக்கும் உலக சமுதாய சேவா சங்கம் - 15 வேலம்பாளையம் அறிவுத்திருக்கோயில். 300-க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நமது பகுதியில் பல நூறு நிறுவனங்களுக்கு ஸ்கை யோகா பயிற்சிகளை வழங்கி அந்நிறுவனங்களின் பெரும் வளர்ச்சியில் பங்காற்றி வருகிறது. போக்குவரத்துத் துறை, காவல் துறை போன்ற பல அரசு அமைப்புகளுக்கும் பயிற்சி அளித்து நல்ல மாற்றங்கள் விளைந்திருக்கின்றன.
முன்னணி நிறுவனங்கள் பலவும் ஸ்கை யோகாவைத் தங்கள் பணியாளர்களுக்கு அளித்து ஏற்றம் கண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் ஸ்கை யோகாவைத் தங்கள் பணியாளர்களுக்கு அளித்ததன் மூலம் சீராக வளர்ந்து முன்னணி நிறுவனங்களாக உருவெடுத்திருக்கின்றன.
Certificate Course
ஸ்கை யோகா சான்றிதழ் கல்வியினை உங்கள் நிறுவனத்திற்கே நேரடியாக வந்து உங்களுக்கு உகந்த நேரத்தில் கற்றுத் தருகிறோம். இக்கல்வி வாரத்திற்கு 3 மணி நேரம் வீதமாக 4 மாத காலத்தில் கற்றுத் தரப்படும்.
வகுப்பை உங்கள் நிறுவனத்திற்கே வந்து நடத்த குறைந்தது 40 பணியாளர்களாவது சேர வேண்டும்.
| பணியாளர் எண்ணிக்கை | ஒருவருக்கான கட்டணம் |
|---|---|
| 40 - 60 | ₹ 1750 /- |
| 60 - 120 | ₹ 1500 /- |
| 120 க்கு மேல் | ₹ 1250 /- |
"ஊதியம் ஊக்கத்தொகை இன்னபிற அனைத்தை விடவும் மதிப்புயர்வு வாய்ந்தது, உங்கள் தொழிலாளர்களுக்காக நீங்கள் தரும் இப் பயிற்சிகள்."
ஒரு நிறுவனம் வளரும்போது தொழிலாளியும் வளர்கின்றார். ஒரு தொழிலாளி வளரும்போது நிறுவனமும் வளர்கிறது.
- Bruce D. Henderson, The Boston Consulting Group
உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஸ்கை யோகா பயிற்சியை அளிப்பதன் மூலம் உங்கள் நிறுவன வளர்ச்சியில் துணை சேர்க்க, அன்பும் அனுபவமும் வாய்ந்த எங்கள் குழு தயாராக இருக்கிறது.